/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் தனி மருத்துவ அறைகள் : மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் கோரிக்கை

ADDED : ஆக 22, 2011 10:51 PM
புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் மூத்த குடி மக்களுக்கென தனியாக இலவச படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ அறைகள் ஒதுக்கி தர வேண்டும் என மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் எஸ்.வி.அய்யர் தலைமையில், துணை தலைவர் உதய பாஸ்கரன், செயலாளர்கள் நடராஜன் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கத்திற்கு பொருத்தமான இடத்தை அரசு ஒதுக்கி தர வேண்டும்.
மூத்த குடி மக்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது, அரசு பஸ்களில் 25 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கும் நடைமுறை ஒரு சில மாநிலங்களில் உள்ளது. பற்றாக்குறை வருமானம் பெறும் எங்களுக்கும் கட்டணச் சலுகை தர வேண்டும். அரசு மருத்துவ மனையில் மூத்த குடி மக்களுக்கென தனியாக இலவச படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ அறைகள் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள், ராஜவேலு, கல்யாணசுந்தரம் ஆகியோரிடமும் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.