/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் நலனுக்கான திட்டங்கள் கவர்னர் உரையில் இல்லை : ஓம்சக்தி சேகர் "காட்டம்'
/
மக்கள் நலனுக்கான திட்டங்கள் கவர்னர் உரையில் இல்லை : ஓம்சக்தி சேகர் "காட்டம்'
மக்கள் நலனுக்கான திட்டங்கள் கவர்னர் உரையில் இல்லை : ஓம்சக்தி சேகர் "காட்டம்'
மக்கள் நலனுக்கான திட்டங்கள் கவர்னர் உரையில் இல்லை : ஓம்சக்தி சேகர் "காட்டம்'
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : 'மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் எந்த ஒரு திட்டமும் கவர்னர் உரையில் இல்லை' என, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., பேசினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அவர் பேசியதாவது: புதிய வேலைவாய்ப்பு பற்றி கவர்னர் உரையில் எதுவும் இல்லை. கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரையை சற்றே சீர்படுத்தி இந்த ஆண்டு கொடுத்துள்ளனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என கூறினீர்கள். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை கொடுக்கப்படுகிறதா... சொசைட்டி மூலம் வேலை வாய்ப்புகளை கொடுப்பது என்ன நியாயம். அமைச்சர்கள் தொகுதிகளுக்கு மட்டும் வேலைவாய்ப்புகளைக் கொடுத்தால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகள் என்னாவது... அனைத்து தொகுதிக்கும் பொதுவானவர் என்பதை அமைச்சர்கள் மறக்கக் கூடாது.சட்டம் ஒழுங்கு சரியில்லை, சமீபத்தில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கை சீரமைக்க எந்த அறிவிப்பும் இல்லை.
மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அவசர கோலத்தில் திறக்கப்பட்டது. அங்குள்ள நான்கு மாடிகளில் 2 மாடிகள் மட்டுமே செயல்படுகின்றன. தினம் ஏராளமானோர் வந்து செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேம்பாலம் அமைக்கப்படும் என 4 ஆண்டுகளாகக் கூறி வருகிறீர்கள். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான திட்டம் எதுவுமில்லை. மாநில மக்கள் நலனுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும், வருவாயைப் பெருக்கவும் எந்த ஒரு திட்டமும் இல்லை. கவர்னர் உரையானது, சாஸ்திர சம்பிரதாய உரையாகவே உள்ளது. இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.