sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்

/

புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்

புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்

புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்


ADDED : ஆக 26, 2011 12:26 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : 'சமச்சீர் கல்விக்கான சட்டத்தை புதுச்சேரியிலும் நிறைவேற்ற வேண்டும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., கூறினார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில், காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. லட்சுமிநாராயணன்: சமச்சீர் கல்விக்கான சட்ட விதிகள் புதுச்சேரிக்கு இல்லாததை அரசு அறியுமா? அமைச்சர் கல்யாணசுந்தரம்: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளில் தமிழக அரசின் பாடத் திட்டம் பின்பற்றப்படுவதால் இதுதொடர்பாக தனி சட்ட விதிகளை உருவாக்கத் தேவையில்லை. லட்சுமிநாராயணன்: தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். அந்த சட்டம் நேரடியாக இங்கே வந்து விடுமா... புதுச்சேரிக்கென தனி சட்டத்தை இங்கேயும் இயற்ற வேண்டும். யாராவது வழக்கு தொடர்ந்தால் என்னாவது... முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் அமைக்கும் வரை, தமிழகத்தையே பின்பற்றுகிறோம். லட்சுமிநாராயணன்: தமிழகத்தை பின்பற்றுவதில் தவறு இல்லை. ஆனால், சட்ட அங்கீகாரம் தர வேண்டும். முதல்வர்: மாணவர்களுக்கு இந்த அரசு எப்போதும் உதவியாக இருக்கும்.










      Dinamalar
      Follow us