sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணக்குள விநாயகர் கல்லூரி 5ம் ஆண்டு விழா

/

மணக்குள விநாயகர் கல்லூரி 5ம் ஆண்டு விழா

மணக்குள விநாயகர் கல்லூரி 5ம் ஆண்டு விழா

மணக்குள விநாயகர் கல்லூரி 5ம் ஆண்டு விழா


ADDED : ஆக 27, 2011 11:21 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் மருத் துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 5ம் ஆண்டு கல்லூரி விழா நடந்தது. விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். மருத்துவக் கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன் ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், மருத்துவக் கண்காணிப்பாளர் அமரநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமி ழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். விழாவில் தமிழருவி மணியன் பேசுகையில், மருத்துவ மாணவர்கள் சமுதாய நோக்கத்தோடு வாழ வேண்டும் என்று அறி வுரை வழங்கியதோடு, மருத்துவ மாணவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும், சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் விளக்கி பேசினார். விழாவில் மணக்குள விநாயகர் பொறியியல் கல் லூரி முதல்வர் முனைவர் வெங்கடாஜலபதி, மணக் குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண் மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.












      Dinamalar
      Follow us