ADDED : ஆக 29, 2011 10:55 PM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக மராத்தான் போட்டியில் மாணவர்கள் பிரிவில் சிவசக்தி முதலிடம் பிடித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக ராஜிவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், மாணவர்களுக்கு 12 கி.மீட்டர், 6 கி.மீ, 3 கி.மீ., மராத்தான் போட்டி நேற்று நடந்தது.
துணைவேந்தர் தரீன் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கான ஆண்கள் பிரிவில் பேராசிரியர் பிரவீன், பெண்கள் பிரிவில் பேராசிரியை சம்யுக்தா முதலிடம் பிடித்தனர். ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பிரிவில் செல்லப்பன், மாணவர்கள் ஆண்கள் பிரிவில் சிவசக்தி, பெண்கள் பிரிவில் கிளோஷி முதலிடம் பிடித்தனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிதி அதிகாரி ராகவன் பரிசு வழங்கி பாராட்டினார்.