/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடையில் "மினரல் வாட்டர்' லட்சுமி நாராயணன் "ஐடியா'
/
ரேஷன் கடையில் "மினரல் வாட்டர்' லட்சுமி நாராயணன் "ஐடியா'
ரேஷன் கடையில் "மினரல் வாட்டர்' லட்சுமி நாராயணன் "ஐடியா'
ரேஷன் கடையில் "மினரல் வாட்டர்' லட்சுமி நாராயணன் "ஐடியா'
ADDED : ஆக 29, 2011 10:56 PM
புதுச்சேரி : 'ரேஷன் கடைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிக குறைந்த விலையில் வழங்க வேண்டும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: லட்சுமிநாராயணன்: 'ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்' முறையில் சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை, கேன்களில் நிரப்பி, மிகக் குறைந்த விலையில் அரசின் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க அரசு முன் வருமா... முதல்வர் ரங்கசாமி: இதுபோன்ற திட்டம் அரசிடம் இல்லை. லட்சுமிநாராயணன்: கடந்த காலத்தில், நகரத்தில் முத்திரைப்பாளையம் தண்ணீரைப் பிடித்து சமையல் செய்தால் சாப்பிட ருசியாக இருக்கும். தற்போது தண்ணீரின் சுவை முற்றிலுமாக மாறி விட்டது. புதுச்சேரியில் 700க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினால் மக்களுக்கு வசதியாக இருக்கும். முதல்வர் ரங்கசாமி: 15 இடங்களில் குடிநீரை சுத்திகரித்து வழங்குகிறோம். நல்ல தண்ணீரை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். உங்கள் கருத்து எடுத்துக் கொள்ளப்படும்.