/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வர்த்தக சபை சார்பில் மாணவர்களுக்கு பரிசு
/
வர்த்தக சபை சார்பில் மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி வர்த்தக சபை சார்பில் கடந்தாண்டு நடந்த அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி வர்த்தக சபை சார்பில் பிளஸ் 2, மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ். எல்.சி.,பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்தவர்களுக்குப் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் முகமது சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தண்டபாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கல்யாணசுந்தரம் பங்கேற்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த 270 மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினர். வர்த்தக சபை பொதுச்செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.