/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் அன்னை ஆலய பெருவிழா நாளை துவக்கம்
/
அரியாங்குப்பம் அன்னை ஆலய பெருவிழா நாளை துவக்கம்
ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 321ம் ஆண்டு பெருவிழா நாளை துவங்குகிறது.
நாளை 2ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி கொடியேற்றம் செய்து, பீட்டர் அடிகள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மாலை திருப்பலி, தேர்பவனி, தேவநற்கருணை ஆசிர் வழங்கப்படுகிறது. வரும் 10ம் தேதி வரை தினமும் காலையில் திருப்பலி, மாலையில் தேர்பவனி, தேவநற்கருணை ஆசிர் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவையொட்டி, காலை 5 மணிக்கு பாதிரியார் சேவியர் தலைமையில் திருப்பலி, 8 மணிக்கு புதுச்சேரி-கடலூர் பேராயர் ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. 11.30 மணிக்கு அரியாங்குப்பம் பாதிரியார் மைக்கேல் துரைராஜ் தலைமையிலும், மாலை 6 மணிக்கு அருட்தந்தை இயேசு நசரேன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. 12ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.