/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்
/
ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்கம்
ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக வங்கி துவக்க விழா வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
ரோட்டரி சேர்மன் மணி, இலக்கியப் பிரிவு சேர்மன் முத்துராமன் அய்யப்பன் சிறப்புரையாற்றினர். ரோட்டரி தலைவர் ராஜ்குமார் பேசுகையில், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், இல்லதரசிகள் உள்ளிட்டோர் தாங்கள் பயன்படுத்தி, தற்போது உபயோகப்படாமல் உள்ள புத்தகங்களை ரோட்டரி புத்தக வங்கிக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். பல்வேறு தரப்பினர் உபயோகப்படுத்திய நூல்களைப் பெற்று, தேவையானவர்களுக்கு, குறிப்பாக மாணவர்கள், முதியோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு வழங்கிடும் வகையில், ரோட்டரி புத்தக வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபயோகப்படுத்திய நூல்களை, வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்திலும், புரொபஷனல் கொரியர் அலுவலகங்களிலும் கொடுக்கலாம். ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் ஸ்ரீகாந்த், திட்டத் தலைவர் சிவராம் ஆல்வா, சமுதாயப் பணி இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் செய்தனர். ரோட்டரி ரவி, பராங்குசம், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.