/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவ மக்கள் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மீனவ மக்கள் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2011 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மீனவ மக்கள் கழகம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு குழுமம் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு பொதுச் செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். பெரியகாலாப்பட்டு தனியார் மருந்து கம்பெனியின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை பைப் லைன் கடலில் கலப்பதால், அப்பகுதி மீனவ மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சுனாமி நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மீனவ மக்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.