/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 20,000க்கு மேல் எடுத்து சென்றால் கணக்கு கூற வேண்டும்: சந்திரன்
/
ரூ. 20,000க்கு மேல் எடுத்து சென்றால் கணக்கு கூற வேண்டும்: சந்திரன்
ரூ. 20,000க்கு மேல் எடுத்து சென்றால் கணக்கு கூற வேண்டும்: சந்திரன்
ரூ. 20,000க்கு மேல் எடுத்து சென்றால் கணக்கு கூற வேண்டும்: சந்திரன்
ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : 'இடைத் தேர்தலை முன்னிட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்' என, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறினார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படும். இதைத் தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் எல்லைகளில் வாகன சோதனை உடனடியாக துவக்கப்படும். மேலும், லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தொடர் சோதனை நடத்துவர். பணம் பரிமாற்றம் தொடர்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 20 ஆயிரம் ரூபாய்க்குமேல் எடுத்து சென்றால், அந்தப் பணத்துக்குக் கணக்கு கூற வேண்டும். கலால் துறை உத்தரவுப்படி மதுக்கடைகள் இரவில் குறித்த நேரத்தில் மூடப்பட வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது. தேவைப்பட்டால் பாதுகாப்புப் பணிக்குத் துணை ராணுவ படையினர் அழைக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.