sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய திரைப்பட விழா இன்று துவக்கம் சிறந்த படமாக அங்காடி தெரு தேர்வு

/

இந்திய திரைப்பட விழா இன்று துவக்கம் சிறந்த படமாக அங்காடி தெரு தேர்வு

இந்திய திரைப்பட விழா இன்று துவக்கம் சிறந்த படமாக அங்காடி தெரு தேர்வு

இந்திய திரைப்பட விழா இன்று துவக்கம் சிறந்த படமாக அங்காடி தெரு தேர்வு


ADDED : செப் 09, 2011 12:16 AM

Google News

ADDED : செப் 09, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழா இன்று மாலை தொடங்குகிறது.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை, நவதர்சன் திரைப்படக் கழகமும், அலையன்ஸ் பிரான்சேவும் இணைந்து 'இந்தியத் திரைப்பட விழா 2011'யை இன்று நடத்துகின்றன. விழாவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் திரைப்படங்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ. 50 ஆயிரம் பணமுடிப்பு வழங்கப்பட உள்ளது.

இதில் சிறந்த திரைப்படமாக 'அங்காடித்தெரு' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் வசந்த பாலனுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா இன்று மாலை 6 மணியளவில் அலையன்ஸ் பிரான்சே திரையரங்கில் நடக்கிறது. நாளை (10ம் தேதி) முதல் 13ம் தேதி வரை மாலை 6 மணிக்கு அமி ஆடு என்ற வங்காள மொழித் திரைப்படமும், நாலுபெண்ணுங்கள் என்ற மலையாள மொழிப்படமும், வனஜா என்ற தெலுங்கு மொழிப்படமும், ராவணன் என்ற தமிழ் மொழிப் படமும் திரையிடப்பட உள்ளன. துவக்க நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, இயக்குனர் வசந்தபாலனுக்கு விருது மற்றும் பரிசு வழங்குகிறார். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் தீபக்குமார், நவதர்சன் திரைப்படக் கழகத் தலைவி சாயிகுமாரி, அலையன்ஸ் பிரான்சே தலைவர் டாக்டர் நல்லாம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். படங்களை காண அனுமதி இலவசம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us