sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குறித்த நாட்களில் செலவு கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

/

குறித்த நாட்களில் செலவு கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

குறித்த நாட்களில் செலவு கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

குறித்த நாட்களில் செலவு கணக்குகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை


ADDED : செப் 29, 2011 01:50 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தேர்தல் செலவு குறித்த கணக்குகளைக் குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட தேதிகளில், தொழிலாளர் துறையிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் மூன்று முறை அவசியம் கணக்குகளைக் காண்பிக்க வேண்டும்.

வரும் 2ம் தேதி, 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், காந்தி நகர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் குமார் சஞ்சயிடம், வரும் 3ம் தேதி, 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கணக்குகளைக் காண்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளைக் காண்பிக்கத் தவறினால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள், தேர்தல் செலவினங்கள் சம்பந்தமான புகார்களை தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, தொழிலாளர் துறையின் இரண்டாம் தளத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேரிலும், மேற்கண்ட தேர்தல் செலவினப் பார்வையாளரிடம் புகார்களைத் தெரிவிக்கலாம்.மேலும், 94421 43808, 0413 2271283 ஆகிய மொபைல், தொலைபேசி எண்கள் மூலமாகவும், 0413 2279211 என்ற பேக்ஸ் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us