/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சியில் பெண்கள் நிலை பகுத்தறிவு இயக்க கருத்தரங்கு
/
உள்ளாட்சியில் பெண்கள் நிலை பகுத்தறிவு இயக்க கருத்தரங்கு
உள்ளாட்சியில் பெண்கள் நிலை பகுத்தறிவு இயக்க கருத்தரங்கு
உள்ளாட்சியில் பெண்கள் நிலை பகுத்தறிவு இயக்க கருத்தரங்கு
ADDED : அக் 02, 2011 01:41 AM
புதுச்சேரி : அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கம் சார்பில் உள்ளாட்சியில் பெண்களின் நிலை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.வணிக அவையில் நடந்த கூட்டத்துக்கு இயக்க நிறுவனர் லலிதாம்பாள் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ராஜவேணி வரவேற்றார். தமிழரசி நோக்க உரையாற்றினார்.கலந்தாய்வு கூட்டத்தை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்து பேசும் போது' தேர்தல் நடக்கும் நேரம் என்பதால் கோரிக்கைகள் குறித்து எந்த முடிவும் அறிவிக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக' கூறினார். முன்னாள் கவுன்சிலர் மாலா, வார்டு உறுப்பினர் சுந்தரி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் முருகமதி, லட்சுமி, இமயவள்ளி, மங்கலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில் புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு செய்ய வேண்டும், அதில் பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு ஊதியத்தொகை வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு நிதிக்கான தனிக்குழுவில் ஆதிதிராவிட பெண்கள் இடம் பெற வேண்டும். நிலமற்ற கூலி விவசாயப் பெண்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், நியமன பதவிகளுக்கும், வாரியங்களுக்கும் பெண்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

