sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., கட்சிக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு

/

காங்., கட்சிக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு

காங்., கட்சிக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு

காங்., கட்சிக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு


ADDED : அக் 02, 2011 01:41 AM

Google News

ADDED : அக் 02, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்., கட்சிக்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

புதிய நீதிக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பொன்னுரங்கம் கூறியதாவது:இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்., கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கேட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இடைத் தேர்தலில் காங்., கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்., கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாஷிங் மெஷின் ஒரு சாராருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கடந்த காங்., ஆட்சியில் முதியோர் பென்ஷன் வயது 55ஆக இருந்தது. இந்த ஆட்சியில் 60ஆக உயர்ந்து விட்டது.ரேஷனில் மஞ்சள் நிற கார்டுகளுக்கு 5 கிலோ கோதுமை , அரிசி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 5 மாதங்களில் ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு கவர்ச்சி திட்டங்களால் மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு பொன்னுரங்கம் கூறினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், வேள்பாரி, தேவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us