/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழும் : ரங்கசாமி
/
காரைக்கால் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழும் : ரங்கசாமி
காரைக்கால் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழும் : ரங்கசாமி
காரைக்கால் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழும் : ரங்கசாமி
ADDED : அக் 11, 2011 02:34 AM
காரைக்கால் : காரைக்கால் மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
காரைக்காலில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ரங்கசாமி பேசுகையில், காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது, ஒதுக்கப்படுகிறது என்ற எண்ணத்தை மாற்ற காரைக்கால் வளர்ச்சி குழு அமைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது. மேலும் வளர்ச்சி பெற வேண்டும். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதிற்காக கப்பல் துறைமுகம் கொண்டுவரப்பட்டது. ஒரு பகுதியில் கல்லூரிகள் வளர்ச் சியும், மறுபகுதியில் தொழிற்சாலைகள் வளர்ச்சியும் உள்ளது. போலகம் தொழிற் பேட்டை பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதேபோல் காரைக்காலில் விமான தளம் அமைக்கும் நிலை உள் ளது. காரைக்கால் மாவட்டம் வளர்ச்சி அடைந்த சிறந்த மாவட்டமாக திகழும். சுற்றுலா பயணிகள் விரும்பி வரும் மாவட்டமாக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் இணைந்து வளர்ச்சி குழு தலைவருடன் ஆலோசனை செய்து வளர்ச்சி பணி களைச் செய்ய வேண்டும். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழவேண்டும். புதுச்சேரி இந்திரா நகர் சட்டமன்ற தேர்தல் முடிவு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

