sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்வி அமைச்சரை நீக்க வேண்டும்: கவர்னரிடம் காங்., மனு

/

கல்வி அமைச்சரை நீக்க வேண்டும்: கவர்னரிடம் காங்., மனு

கல்வி அமைச்சரை நீக்க வேண்டும்: கவர்னரிடம் காங்., மனு

கல்வி அமைச்சரை நீக்க வேண்டும்: கவர்னரிடம் காங்., மனு


ADDED : அக் 11, 2011 02:34 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அமைச்சரவையிலிருந்து கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என, காங்., நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம், ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதியாக, அவர் மீது மாவட்ட கல்வி அதிகாரி போலீசில் புகார் கொடுத்தார். அமைச்சர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சபாநாயகர் சபாபதியை நேற்று முன்தினம் சந்தித்து, விசாரணைக்கு அமைச்சர் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 12.20 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம், காங்., தலைவர் சுப்ரமணியன், எம்.எல்.ஏ.,க்கள் வல்சராஜ், மல்லாடிகிருஷ்ணாராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜ்பவனுக்கு சென்றனர். கவர்னர் இக்பால் சிங்கை சந்தித்து மனு கொடுத்தனர்.



மனுவில்' பத்திரிகை மற்றும் மீடியாக்களில் கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளது. அமைச்சர் மீது திண்டிவனம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர்.போட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் தொடர்பாக அமைச்சரை கைது செய்வதற்கு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் புதுச்சேரியை சேர்ந்த 11 லட்சம் மக்களின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வரும் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் இந்தப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு அமைச்சரவையிலிருந்து கல்யாணசுந்தரத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.










      Dinamalar
      Follow us