/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லியில் ஊடக தொடர்பாளர்கள் பயிலரங்கம் புதுச்சேரி அலுவலர்கள் பங்கேற்பு
/
டில்லியில் ஊடக தொடர்பாளர்கள் பயிலரங்கம் புதுச்சேரி அலுவலர்கள் பங்கேற்பு
டில்லியில் ஊடக தொடர்பாளர்கள் பயிலரங்கம் புதுச்சேரி அலுவலர்கள் பங்கேற்பு
டில்லியில் ஊடக தொடர்பாளர்கள் பயிலரங்கம் புதுச்சேரி அலுவலர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 07, 2025 02:50 AM

புதுச்சேரி : இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஊடக தொடர்பாளர்களுக்கான பயிலரங்கம் டில்லியில் நடந்தது.
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானஷ் குமார் துவக்கி வைத்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெளிப்படைத் தன்மை, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், வரும் காலங்களில் ஊடகத் தொடர்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து மாநிலம் வாரியாக ஊடகத் தொடர்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் ஆசிஷ் கோயல் நேரடியாக கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஊடகத் தொடர்பு அதிகாரி கணபதி, ஸ்விப் நோடல் அதிகாரி பேராசிரியர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அடுத்த மாதம் ஊடகவியலாளர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கு டில்லியில நடக்க உள்ளது.