/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நபரிடம் ரூ. 3 லட்சம் மோசடி
/
புதுச்சேரி நபரிடம் ரூ. 3 லட்சம் மோசடி
ADDED : பிப் 17, 2025 05:53 AM
புதுச்சேரி; ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் உமாகாந்தன்.
இவர் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, ரூ. 40 கட்டணம் செலுத்தி, லாட்டரி டிக்கெட் வாங்கினார். இதையடுத்து, உமாகாந்தனை தொடர்பு கொண்ட மர்மநபர், கேரளாவில் இருந்து லாட்டரி ஏஜெண்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 8 லட்சம் பரிசு விழுந்துள்ளது என, தெரிவித்துள்ளார்.
மேலும், லாட்டரி பரிசு பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் டிபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதைநம்பி உமாகாந்தன், மர்ம நபருக்கு ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 358 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
அவரது புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

