/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வலு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் சாதனை
/
வலு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் சாதனை
வலு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் சாதனை
வலு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : ஆக 08, 2025 02:15 AM

புதுச்சேரி: கேரளாவில் நடந்த மாஸ்டர் அளவிலான வலு துாக்கும் போட்டிகளில் புதுச்சேரி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மாஸ்டர் அளவிலான வலு துாக்கும் போட்டிகள் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது. போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், புதுச்சேரியை சேர்ந்த ஒரு வீராங்கனை உட்பட 11 பேர் கலந்து கொண்டனர். கிளாசிக் மற்றும் எக்யூட் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
'கிளாசிக்' 93 கிலோ எடை பிரிவில் புதுச்சேரி மகேந்திரன், தங்க பதக்கம் வென்றார். 'எக்யூட்' 60 வயது பிரிவில் ஆரோக்கியதாஸ் வெண்கல பதக்கம், 50 வயது பிரிவில் லிங்கேசன் வேலு வெள்ளி பதக்கம், ரியாஸ் அகமது வெண்கலப் பதக்கம் வென்றனர். எக்யூட் 40 வயது மகளிர் பிரிவில் அகிலாண்டேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற வீரர்களை புதுச்சேரி வலு துாக்கும் சங்கத்தினர் பாராட்டினர்.