/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர் பங்கேற்பு
/
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர் பங்கேற்பு
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர் பங்கேற்பு
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர் பங்கேற்பு
ADDED : செப் 25, 2025 03:43 AM
புதுச்சேரி : உஸ்பெகிஸ்தானில் நடக்கும் 4 வது ஐ.சி.சி.டி., ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில், புதுச்சேரியை சேர்ந்த ரோஷன் பங்கேற்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான், தாஷ்கண்ட்டில் 4வது ஐ.சி.சி.டி., ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 20ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில், மத்திய அரசின், இந்திய விளையாட்டு ஆணையம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மூலம் 4வது ஐ.சி.சி.டி., ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் ஜூனியர் சிறுவர் தனிநபர் பிரிவில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த ரோஷன் தேர்வு செய்யப்பட்டு, தற்போது நடந்து வரும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இது புதுச்சேரிக்கு மட்டுமல்ல, காது கேளாதோர் விளையாட்டு வீரர்களை, தொடர்ந்து ஆதரவு அளித்து வளர்த்து வரும் பாண்டிச்சேரி விளையாட்டு காது கேளாதோர் கவுன்சிலுக்கு பெருமையையும், அங்கீகாரத்தையும் அளித்துள்ளதாக நிர்வாகிகள், ரோஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.