/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய தேக்வோண்டோ போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
/
தேசிய தேக்வோண்டோ போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
தேசிய தேக்வோண்டோ போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
தேசிய தேக்வோண்டோ போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
ADDED : நவ 27, 2024 11:20 PM

புதுச்சேரி : தேசிய சப் ஜூனியர் தேக்வோண்டோ போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர்களை புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்க நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய அரசு விளையாட்டு துறையின் அங்கீகாரம் பெற்ற தேக்வோண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 38வது தேசிய சப் ஜூனியர் தேக்வோண்டோ குறுகி மற்றும் 13வது பூம்சே போட்டிகள் வரும் 29ம் தேதி முதல் 1ம் தேதி வரை ஹரியானா மாநிலம், தவுதேவி லால் உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் ரோஹித், திபீஸ்வரன், இவின் எடிசன், தீபக்குமார், ரோஷன், புவனேஸ்வர், சிந்துஜா, மதுமிதா, தீக்ஷயா, மகந்த், வருண் பார்த்திபன், ரேஷ்மா பார்த்திபன், அக்ஷிதா, சாம் பிரசாத், எய்டன் ராய் சாமுவேல் ஆகியோர் தேர்வாகி தேசியப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங், பயிற்சியாளர் தக்ஷனப்பிரியா, மேலாளர் பார்த்திபன், ஷகிலா, பிரீத்தா பார்த்திபன் மற்றும் தேசிய நடுவர் மஞ்சுளாதேவி ஆகியோர் செல்கின்றனர்.
லாஸ்பேட்டை துரோணா தேக்வோண்டோ அகாடமியில் விரர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில், புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின் வீரர்களை வாழ்த்தி, சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பினார். பொது செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், அமைப்பு செயலாளர் நந்தகுமார் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
ஏற்பாடுகளை மதன், சிலம்பரசன் ஆகியோர் செய்திருந்தனர்.