/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு
/
ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு
ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு
ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு
ADDED : ஏப் 22, 2025 04:34 AM

புதுச்சேரி: ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் 20வது சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி வீரர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
தென்கொரியாவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 20வது ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி சண்டிகரில் கடந்த வாரம் நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தேர்வில், ஜூனியர் பிரிவில் ஆசிய ஸ்கேட்டிங் ரோலர் போட்டியில் பங்கேற்க, புதுச்சேரியை சேர்ந்த ஜெஷிதா கிருஷ்ணகுமார், சாரதி திருமால் ஆகியோர் தேர்வு பெற்று, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆசிய போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்ற வீரர்களுக்கு ஸ்கேட்டர் ரோலிங் பயிற்சியாளர் தாமஸ், செயலர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெஷிதா கிருஷ்ணகுமார் இதுவரை தேசிய அளவில் 10 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கமும், சாரதி திருமால் தேசிய அளவில் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அளித்து ஆதரவு தர வேண்டுமென ஸ்கேட்டர் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.