/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிய அளவில் கயிறு இழுக்கும் போட்டி; புதுச்சேரி வீரர்கள் மலேசியா பயணம்
/
ஆசிய அளவில் கயிறு இழுக்கும் போட்டி; புதுச்சேரி வீரர்கள் மலேசியா பயணம்
ஆசிய அளவில் கயிறு இழுக்கும் போட்டி; புதுச்சேரி வீரர்கள் மலேசியா பயணம்
ஆசிய அளவில் கயிறு இழுக்கும் போட்டி; புதுச்சேரி வீரர்கள் மலேசியா பயணம்
ADDED : அக் 13, 2025 12:53 AM

புதுச்சேரி; ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் புதுச்சேரி வீரர்களை ஏதிர்க்கட்சி தலைவர் சிவா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மலேசியாவில் ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டி, வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இப்பபோட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி மாநில வீரர்கள் மடுகரையைச் சேர்ந்த வெங்கடேசன், கிருமாம்பாக்கம் அஜய், தவளக்குப்பம் குரு பிரசாத், டி.என்.பாளையம் பிரசாந்த், வீராங்கனை ஜெயக்குமாரி ஆகியோர் பங்கேற்று, இந்திய அணியில் இடம் பெற்றனர். இவர்கள் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடக்க இருக்கும் இறுதி கட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். அதன் பிறகு 23ம் தேதி கொச்சியில் இருந்து மலேசியா புறப்படுகின்றனர்.
அவர்களை, எதிர்க்கட்சி தலைவர் சிவா வாழ்த்தி, வழியனுப்பினார்.
நிகழ்ச்சியில், சங்க செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், சங்க உறுப்பினர் அகிலன், பயிற்சியாளர்கள் நந்தகோபால், பார்த்திபன், தொகுதி பொருளாளர் சசிகுமார், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், ராம்குமார், தொகுதி மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.