தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு விடைபெறுகிறது: மீண்டும் வேகமெடுக்கும் மேம்பாட்டு பணிகள்

 புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு விடைபெறுகிறது: மீண்டும் வேகமெடுக்கும் மேம்பாட்டு பணிகள்

 புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு விடைபெறுகிறது: மீண்டும் வேகமெடுக்கும் மேம்பாட்டு பணிகள்


ADDED : பிப் 08, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுலா பயணிகள் குவியும் புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனை ரூ.93 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு காணொலி வாயிலாக துவங்கி வைத்தார். அதனையொட்டி, கட்டடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், ரயில் ஓட்டுனர் ஓய்வு அறைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும், பயணிகள் காத்திருப்பு அறைகள், நடைமேம்பாலம், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகம், மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், மேம்பாட்டு பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. அதனையொட்டி, புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனின் மிக பழமையான முகப்பு இடிக்கப்பட்டு வருகிறது.

விடைபெறுகிறது... புதுச்சேரி ரயில் பாதை இந்தியாவின் பழமையான ரயில் இணைப்புகளில் ஒன்றாகும்.

இது 1879ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் புதுச்சேரி ரயில்வே நிறுவனத்தால் கட்டப்பட்டது. தென்னிந்தியாவுடன் புதுச்சேரி நகரத்தையும், துறைமுகத்தையும் இணைக்கும் நோக்கில் தென்னிந்திய ரயில்வேயின் மேற்பார்வையின் கீழ், புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரயில் பாதை நிறுவப் பட்டுள்ளது.

அப்போதைய வல்லரசுகளான பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பகை இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை அவர்கள் நல்ல புரிதலைக் கொண்டிருந்தனர்,

அதற்கு, புதுச்சேரி ரயில்வே அமைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

அதனால், ரயில்வே ஸ்டேஷன் முகப்பை மாற்றாமல் பிற பகுதிகளை மாற்றி அமைக்கலாம். அதனுடைய பழமையை அப்படியே பாதுகாக்கலாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. அது, ஏற்கப்படாததால், புதுச்சேரியின் ரயில் நிலைய முகப்பு பகுதி முழுவதுமாக விடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us