தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரதமர் மோடி வருகைக்கு புதுச்சேரி... ரெடி பாதுகாப்பு வளையத்திற்குள் லாஸ்பேட்டை

பிரதமர் மோடி வருகைக்கு புதுச்சேரி... ரெடி பாதுகாப்பு வளையத்திற்குள் லாஸ்பேட்டை

பிரதமர் மோடி வருகைக்கு புதுச்சேரி... ரெடி பாதுகாப்பு வளையத்திற்குள் லாஸ்பேட்டை


ADDED : பிப் 28, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகையையொட்டி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் சிறப்பு பாதுகாப்பு படை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுச்சேரி, தமிழகம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி இந்த 5 மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

அதன்படி நாளை 1ம் தேதி புதுச்சேரி, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் அரசு சார்பில் நடக்கும் விழாவில், புதுச்சேரியில் உள்கட்டமைப்பு, நகர்ப்புற சேவைகள், தொழில்துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ரூ.2700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

இன்று (28ம் தேதி) மாலை டில்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி, இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11:40 மணிக்கு புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை, கவர்னர் கைலாஷ்நாதன். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் 12:40 மணிக்கு விமானம் மூலம், மதுரைக்கு செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் அளவிற்கு விழா மேடை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக முழு வீச்சில நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழா மேடை அமைந்துள்ள லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம், நேற்று முன்தினம் மாலை முதல் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று முன்தினம் தலைமை செயலர், டி.ஜி.பி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். மேலும், லாஸ்பேட்டை வளாகம் முழுவதும் மாநில போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மாலை, லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் விழா மேடை அமைக்கும் இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதிகாரிகள் ஆலோசனை:: பிரதமர் வருகையையொட்டி நாளை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் லாஸ்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து டி.ஜி.பி., தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us