ADDED : மே 21, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100.2 டிகிரி வெயில் பதிவானதால் சலையில் அனல் காற்று வீசியது.
அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் 99.7 டிகிரி வெயில் பதிவானது. அன்றைய தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில்,நேற்று அதிகபட்சமாக 100. 2 டிகிரி வெயில் பதிவானது. மாலை வரை சாலையில் அனல் காற்று வீசியதால் வெளியில் வரமுடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
