ADDED : மே 23, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 102.4 டிகிரி வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக நேற்று 102.4 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்த 3 நாட்களாக வெயில் சதம் அடித்து வருவதால், மக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டி லேயே முடங்கி இருந்தனர்.
நகரப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. மதிய நேரத்தில் சாலையில் வெப்ப அலை வீசியதால் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
வெயிலின் தாக்கத்தால் ஜூஸ், மோர், தர்பூசணி நொங்கு விற்பனை அமோகமாக நடந்தது.
