/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குவியும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நெரிசலில் திணறும் புதுச்சேரி சாலைகள்

ADDED : டிச 25, 2025 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் சூழ்நிலையில் நகர சாலைகள் அனைத்தும் நெரிசலில் திணறி வருகின்றன.
கிறிஸ்துமஸ் விழாவுடன் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிய துவங்கியுள்ளனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி ஓட்டல் அறைகள் அனைத்தும் ஹஸ்வுல்லாகி வருகிறது. ஓட்டல்கள், ரிசார்ட்களில் வரும் 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மதுவிருந்துடன் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமும் பல்லாயிரக்கண்கான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குவிந்து வருவதால் புதுச்சேரியின் அனைத்து சாலைகளிலும் நெரிசல் உச்சக்கட்டத்தில் திணறி வருகின்றன. சிக்னல்களை கடக்கவே வாகன ஓட்டிகள் படாதபாடு படவேண்டியுள்ளது. பொறுமை இழக்கும் வாகன ஓட்டிகளில் சந்து பொந்துகளில் புகுந்து தப்பி செல்லுகின்றனர்.
கடந்தாண்டு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் இந்தாண்டு 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை புதுச்சேரியில் கொண்டாட்டத்திற்கு திரளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.