/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரவுடி ஆந்திராவில் கைது
/
புதுச்சேரி ரவுடி ஆந்திராவில் கைது
ADDED : ஜூலை 15, 2025 07:28 AM
புதுச்சேரி : காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுகன், 34; ரவுடியான இவர் மீது, புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு, கடத்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், கோர்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார். இதன் காரணமாக அவரை கைது செய்ய கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் சுகன், ஆந்திரா பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் ஆந்திராவில் இருந்த அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின், அவரை உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.