/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம் அறிமுகம்
/
புதுச்சேரி சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம் அறிமுகம்
புதுச்சேரி சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம் அறிமுகம்
புதுச்சேரி சங்காலயா மோட்டார்சில் மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம் அறிமுகம்
ADDED : செப் 25, 2024 06:24 AM

புதுச்சேரி : சங்காலயா மோட்டார்ஸ் சார்பில், மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம் அறிமுக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் துரைராஜ் வரவேற்றார். இயக்குநர் கோமதி துரைராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, மகேந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சிவசங்கரன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் சதிஷ்குமார், நடிகை ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகேந்திரா அண்டு மகேந்திரா விற்பனை மேலாளர் விக்னேஷ், புதிய தார் ராக்ஸ் வாகனத்தின் சிறப்பு குறித்து கூறுகையில், 'தார் ராக்ஸ் வாகனத்தில், பெரிய அளவிலான ஸ்கைரூப், லெவல் 2 ஏ.டி.ஏ.எஸ்., 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, கார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், 19 டைமண்ட் கட் அலாய் வீல், லெதர்ரேட் இருக்கை, டோர்ரிம்ஸ், டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு வர்ஷனில் கிடைக்கிறது. ஜி.என். கேப் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. ஏழு வண்ணங்களில் கிடைக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் ஆரம்ப விலை ரூ. 12.99 லட்சம்' என தெரிவித்தார்.
சங்காலயா மோட்டார்ஸ் பொது மேலாளர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சசிக்குமார், விற்பனை மேலாளர்கள் வசந்தகுமார், ஜெகத்குரு, தியாகராஜன், குமாரவேல், நிதி மேலாளர் ஹரிகரன், மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஜெயக்குமார், குருபிரசாத், தீபா, விஜயலட்சுமி கலந்து கொண்டனர். சங்காலயா மோட்டார்ஸ் தலைமை இயக்க அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.