மருத்துவ விடுப்பில் தேர்தல் பணி புதுச்சேரி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
மருத்துவ விடுப்பில் தேர்தல் பணி புதுச்சேரி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : மே 13, 2026 03:36 AM
புதுச்சேரி: மருத்துவ விடுப்பில், அரசியல் கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றிய சப் -- இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்து, டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி போலீஸ் துறையில் சப் -- இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் ராஜசேகர். இவர், சில மாதங்களுக்கு முன் மாகி, சிறப்பு பிரிவு சப் - இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியில் சேர்ந்த ராஜசேகர், உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவ விடுப்பில் புதுச்சேரி திரும்பினார்.
மருத்துவ விடுப்பை அவர் நீட்டிப்பு செய்ததை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளாமல், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காமராஜ் நகர் தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, ராஜசேகரை 'சஸ்பெண்ட்' செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.
