தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி தெற்கு, ஏனாம், காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி

புதுச்சேரி தெற்கு, ஏனாம், காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி

புதுச்சேரி தெற்கு, ஏனாம், காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி


ADDED : பிப் 05, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி தெற்கு, ஏனாம் மற்றும் காரைக்கால் அணிகள் வெற்றி பெற்றன.

புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கேப் சீசெம் மைதானத்தில் நடக்கும் மாஸ்டர்ஸ் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று காலை 9:15 மணிக்கு, புதுச்சேரி தெற்கு மற்றும் வடக்கு அணிகள் மோதின.

முதலில் ஆடிய தெற்கு அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வடக்கு அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து, 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், தெற்கு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த மதன், 16 பந்துகளில் 40 ரன்கள் அடித்து, ஆட்டநாயகன் விருது பெற்றார்.

காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில், ஏனாம் மற்றும் புதுச்சேரி மேற்கு அணிகள் களம் இறங்கின.முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 45 ரன்களில் சுருண்டது.தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி 4.4 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து 47 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த அணியின் சத்திய நாராயணா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி, 27 ரன்கள் எடுத்து, ஆட்டநாயகன் வென்றார்.

மதியம் 2:15 நடந்த போட்டியில் காரைக்கால் மற்றும் மாகி அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய மாகி அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து, 56 ரன்கள் எடுத்தது.

காரைக்கால் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின்,பன்னீர்செல்வம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us