தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி

புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி

புதுச்சேரி தெற்கு, காரைக்கால் அணிகள் மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் வெற்றி


ADDED : பிப் 04, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி தெற்கு மற்றும் காரைக்கால் அணிகள் வெற்றி பெற்றன.

புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கேப் சீசெம் மைதானத்தில் நடக்கும் மாஸ்டர்ஸ் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று காலை 9:15 மணிக்கு, புதுச்சேரி வடக்கு மற்றும் மேற்கு அணிகள் மோதின.

முதலில் மேற்கு அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வடக்கு அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து, 110 ரன்கள் எடுத்ததால், விறுவிறுப்பான போட்டி, 'டை'யில் முடிந்தது. இதில், 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த ,வடக்கு அணியின் சுரேஷ் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

காலை, 11:45 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி தெற்கு மற்றும் மாகி அணிகள் களம் இறங்கின.முதலில் ஆடிய மாகி அணி, 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 74 ரன்கள் அடித்தது.

அடுத்து தெற்கு அணி, 7.3 ஓவர்களில், 1 விக்கெட் மட்டுமே இழந்து, 77 ரன்கள் அடித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில், 3 விக்கெட்டுகள் வீழ்த்திய, தெற்கு அணியின் பிரவீன் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.

மதியம், 2:15 மணிக்கு நடந்த போட்டியில் காரைக்கால் மற்றும் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்களைகுவித்தது. தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து, 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் காரைக்கால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 19 பந்துகளில், 45 ரன்கள் குவித்த, காரைக்கால் அணியை சேர்ந்த கருப்புசாமி ஆட்டநாயகன் விருது வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us