தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி மாநில கபடி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி மாநில கபடி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி மாநில கபடி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


UPDATED : அக் 14, 2026 07:39 PM

ADDED : அக் 14, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:39 PM ADDED : அக் 14, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கபடி சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.

கூட்டத்தில், புதுச்சேரி மாநில கபடி சங்கத்தின் தேர்தல் அதிகாரி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். அகில இந்திய கபடி சம்மேளனத்தின் மேற்பார்வையாளராக இந்திய கபடி அணியின் கேப்டன் ஆறுமுகம், கூட்டமைப்பு செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில கபடி சங்கத்தின் தேர்தல் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் தொழில்நுட்ப அணி சேர்மேன் விவேக் உஷிரெட்டி சிவகிருஷ்ணா, கன்வீனர் ஹித்தேஷ் ராய், இணை கன்வீனர் பவன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரி மாநில கபடி சங்கத்தின் 2026–30ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, சேர்மன் அருள்தாஸ், தலைவர் மணிவண்ணன், துணை தலைவர்கள் பாலபாஸ்கரன், செந்தில்குமார், பொதுச் செயலாளர் செல்வம், இணை செயலாளர்கள் பாண்டுரங்கன், சண்முகசுந்தரம், பொருளாளர் விஷ்ணுராஜ், செயற்குழு உறுப்பினர்கள் பிரபு, பிரஸ்னவ், கவியரசன், நடுவர் குழு கன்வினர் பழனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், 2026–27ம் ஆண்டிற்கான கபடி சேம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக நடத்துவது. மகாராஷ்டிராவில் நடக்கும் சீனியர், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஜூனியர், அரியானாவில் சப் ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி கபடி அணிகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனை தேர்வு செய்ய கன்வீனர் பழனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேர்மேன் அருள்தாஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us