/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாநில டி-20 கிரிக்கெட் அன்னை ராணி அணி சாம்பியன்
/
புதுச்சேரி மாநில டி-20 கிரிக்கெட் அன்னை ராணி அணி சாம்பியன்
புதுச்சேரி மாநில டி-20 கிரிக்கெட் அன்னை ராணி அணி சாம்பியன்
புதுச்சேரி மாநில டி-20 கிரிக்கெட் அன்னை ராணி அணி சாம்பியன்
ADDED : மார் 11, 2024 04:49 AM

புதுச்சேரி, : மாநில அளவிலான, டி-20, கிரிக்கெட் போட்டியில், அன்னை ராணி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்டு அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான, 15 வது, டி-20 கிரிக்கெட் லீக் கம் நாக் - அவுட், இறுதி போட்டி, ஜிப்மர் மைதானத்தில் நேற்று நடந்தது.
அன்னை ராணி மற்றும் சோழன் அணிகள் மோதின. முதலில் ஆடிய சோழன் அணி, 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் மணிகண்டன் - 32; பரத் - 30; சுரேஷ் - 27, ரன்கள் எடுத்தனர். அன்னை ராணி அணி சூர்யா 3 விக்கெட், மோகன் மற்றும் பரத்குமார் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய அன்னை ராணி அணி 14 ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சோழன் அணி சுரேஷ் 3 விக்கெட், சோமசுந்தரம் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அன்னை ராணி அணிக்கு முதல் பரிசாக, ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த சோழன் அணிக்கு ரூ.10ஆயிரம், 3ம் இடம் பிடித்த புதுச்சேரி போலீஸ் அணிக்கு ரூ.7ஆயிரம், 4ம் இடம் பிடித்த கோர்காடு அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
தொடரின் சிறந்த வீரராக அன்னை ராணி அணி தினேஷ், இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக மோகன், சிறந்த பந்து வீச்சாளராக சோழன் அணி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.
வென்ற அணிகளுக்கு சபாநாயகர் செல்வம், அருண் சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் நிறுவனர் வீரராகு, அவரது மனைவி பிரபாவதி, முத்தியால்பேட்டை பா.ஜ., மாவட்ட செயலாளர் செந்தில் குமரன், ஓய்வு பெற்ற ஆய்வாளர் மனோகரன், ஸ்ரீதர் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஸ்ரீதர், பக்கா அசோசியேஷன் தலைவர் சோமசேகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

