/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
/
காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
ADDED : ஏப் 10, 2025 04:15 AM
புதுச்சேரி: தேசிய அளவிலான காது கேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
காது கேளாதோர் அனைத்து விளையாட்டு கவுன்சில் சார்பில், 24வது தேசிய காது கேளாதோர் சீனியர் சாம்பியன்ஷிப் மற்றும் 9வது சப் ஜூனியர், ஜூனியர் அளவிலான விளையாட்டு போட்டிகள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதில், புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், மாணவர்கள் பங்கேற்றனர். சப் ஜூனியர் பிரிவில் 2 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மாணவர் விவேகன் வெள்ளி பதக்கம், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.
சீனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் மாணவர் அய்யப்பன், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் 110 தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.
சீனியர் அணி தொடர் 400 மீட்டர் ரிலேவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டு கவுன்சில் பொது செயலாளர் பசித், தலைவர் அய்யப்பன், பயிற்சியாளர் கோபு மற்றும் சத்தியபுவனம் ஆகியோர் உடனிருந்தனர்.

