/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
/
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மே 08, 2025 01:20 AM

புதுச்சேரி: பீகாரில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு போட்டியில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 26 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.
கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு விழா கடந்த 5ம் தேதி பீகார் மாநிலத்தில் துவங்கியது. வரும் 25ம் தேதிவரை நடைபெறும் இப்போட்டியில் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதில், புதுச்சேரி மாநிலம் சார்பில் மல்லர் கம்பம் போட்டியில் தலா 6 மாணவ, மாணவிகளும், செட்டக் சக்ரா போட்டியில் 3 மாணவர்கள், மல்யுத்தம் மற்றும் பளு துாக்குதல் போட்டியில் தலா 3 மாணவிகள், கலரி பையட் போட்டியில் மாகியை சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 26 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கான போட்டிகள் கயா மற்றும் பாட்னாவில் நடைபெற்று வருகிறது.