/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி
/
புதுச்சேரி டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி
புதுச்சேரி டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி
புதுச்சேரி டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி
ADDED : பிப் 04, 2024 03:46 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும், டி-20 கிரிக்கெட் முதல் அரையிறுதி லீக் போட்டியில், அன்னை ராணி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன் நடத்தும், டி-20 கிரிக்கெட் 'லீக் கம் நாக்கவுட்' போட்டி, லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், 32 கிரிக்கெட் கிளப் அணிகளை சேர்ந்த, 500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த வாரம் நடந்த முதல் அரையிறுதி லீக் போட்டியில், அன்னை ராணி மற்றும் கோர்காடு கிரிக்கெட் அணிகள் மோதின.
முதலில் களம் இறங்கிய கோர்காடு கிரிக்கெட் அணி, 15 ஓவர்களில், 10 விக்கெட்டுகளை இழந்து, 108 ரன்கள் எடுத்தது. அன்னை ராணி கிரிக்கெட் அணியின் தினேஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பரத் கணேஷ் மற்றும் சூரியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய அன்னை ராணி கிரிக்கெட் அணி, 9 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 110 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது. இந்த அணியின் மோகன் 38 ரன்களும், கணேஷ் 37 ரன்களும் எடுத்தனர்.
பிரவீன், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.