/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டி - 20 அரை இறுதி 6வது லீக் போட்டி சோழன் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/
புதுச்சேரி டி - 20 அரை இறுதி 6வது லீக் போட்டி சோழன் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
புதுச்சேரி டி - 20 அரை இறுதி 6வது லீக் போட்டி சோழன் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
புதுச்சேரி டி - 20 அரை இறுதி 6வது லீக் போட்டி சோழன் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ADDED : மார் 05, 2024 05:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அசோசியேஷன் நடந்து வரும் டி - 20ல் அரை இறுதி 6வது லீக் போட்டியில், சோழன் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேசன் நடத்தும் 15வது ஆண்டு டி-20 கிரிக்கெட் லீக் மற்றும் நாக் -அவுட் கிரிக்கெட் போட்டி லாஸ்பேட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற புதுச்சேரி காவல் துறை கிரிக்கெட் அணி, அன்னை ராணி கிரிக்கெட் அணி, சோழன் கிரிக்கெட் அணி, கோர்காடு கிரிக்கெட் அணி உட்பட 4 கிரிக்கெட் அணிகள் அரை இறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த வாரம் நடந்த அரை இறுதி 6 வது லீக் போட்டியில் புதுச்சேரி காவல்துறை கிரிக்கெட் அணியும் சோழன் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களம் இறங்கிய புதுச்சேரி காவல்துறை கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சதீஷ் 39 ரன்களை குவித்தார். செல்வா 31 ரன்களை எடுத்தார். ரஞ்சித் 31 ரன்களும் விஜய் 25 ரன்களும் எடுத்தார்கள். சோழன் கிரிக்கெட் அணியின் சந்தோஷ் 3 விக்கெட்களும் சோமு மற்றும் சுரேஷ் தலா இரண்டு விக்கெட்களும் எடுத்தார்கள். பின் களம் இறங்கிய சோழன் கிரிக்கெட் அணி 15.4 ஒவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் பரத் 28 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். சிரஞ்சீவி 16 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார் மணி 35 ரன்கள் எடுத்தார்.
புதுச்சேரி காவல்துறை கிரிக்கெட் அணியின் உருளையன்பேட் காவல் நிலைய ஆய்வாளர் சத்ய நாராயணா நான்கு விக்கெட்களும் விஜய் 3 விக்கெட்களும் எடுத்தார்கள். சோழன் கிரிக்கெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி அரை இறுதி லீக் போட்டியில் சோழன் கிரிக்கெட் அணி பெரும் இரண்டாவது வெற்றி ஆகும். போட்டியின் ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் ஆகியோர் செய்து வருகின்றனர்.

