/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய ஹாக்கி போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
/
தேசிய ஹாக்கி போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
ADDED : ஏப் 10, 2025 04:15 AM
புதுச்சேரி: தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள புதுச்சேரி வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சீருடை வழங்கி வாழ்த்தினார்.
ஹாக்கி இந்தியா சம்மேளனம் சார்பில், சீனியர் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வரும் 15ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 38 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியில் பங்கேற்கவுள்ள லீ புதுச்சேரி ஹாக்கி அணி வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு, அமைச்சர் சீருடை வழங்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார்.
அப்போது லீ புதுச்சேரி ஹாக்கி சங்க தலைவர் குமரேசன், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.