/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மல்லர் கம்பம் போட்டி புதுச்சேரி அணி சாதனை
/
தேசிய மல்லர் கம்பம் போட்டி புதுச்சேரி அணி சாதனை
ADDED : பிப் 07, 2024 11:18 PM

புதுச்சேரி: தேசிய மல்லர் கம்பம் போட்டியில் புதுச்சேரி அணி நான்காம் இடம் பிடித்து சாதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்த 67வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டியில் முதல் முறையாக புதுச்சேரி அணி 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் என, இரு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றன.
இதில், 17 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் நான்காம் இடம், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஐந்தாம் இடம் பிடித்தது. மேலும், 14 வயதிற்குட்பட்டோர் பெண்கள் தனிநபர் பிரிவில், கூடப்பாக்கம் சாய்ராம் வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அன்புக்கரசி மூன்றாம் இடம் பிடித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.
தேசிய அளவில் சாதித்த மாணவிகளை புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இயக்குனர் செந்தில்குமார், இணை இயக்குனர் வைத்தியநாதன், சாய்ராம் பள்ளி முதல்வர் சுதா ஆகியோர் பாராட்டினர்.
மேலும், புதுச்சேரி அணியின் மேலாளர் தணிகைகுமரன், பயிற்சியாளர்கள் வேல்முருகன், கணேஷ், காளீஸ்வரன், அகிலா ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

