/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: புதுச்சேரி அணி வெற்றி
ADDED : நவ 18, 2025 05:55 AM

புதுச்சேரி: 23 வயது ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 23 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.
நேற்று அஹமதாபாத்தில் நடந்த போட்டியில் மத்திய பிரதேச அணியும், புதுச்சேரி அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.
புதுச்சேரி அணியின் கார்த்தி ராஜா 72 ரன்களும், சமர்கான் 47 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி 45.4 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
புதுச்சேரி அணி ராகுல் 5 விக்கெட்டும், சமர்கான் 3 விக்கெட் எடுத்தனர். புதுச்சேரி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 72 ரன்கள் அடித்த புதுச்சேரி அணியின் கார்த்தி ராஜா ஆட்டநாயகன் விருதை வென்றார் .

