தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீனியர் மகளிர் கிரிக்கெட் புதுச்சேரி அணி வெற்றி

 சீனியர் மகளிர் கிரிக்கெட் புதுச்சேரி அணி வெற்றி

 சீனியர் மகளிர் கிரிக்கெட் புதுச்சேரி அணி வெற்றி


ADDED : பிப் 12, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், குஜராத்தில் நடந்த சீனியர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சீனியர் மகளிர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் புதுச்சேரி அணியும், மத்திய பிரதேச அணியும் மோதின.முதலில் ஆடிய மத்திய பிரதேச அணி 41.3 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணிவீராங்கனை அபிராமி 3 விக்கெட்கள் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய புதுச்சேரி அணி 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளைஇழந்து 189 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரி அணி வீராங்கனைகவிஷா அதிகபட்சமாக45 ரன்கள் எடுத்தார்.

கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணியை, வீழ்த்தி வெற்றிபெற்ற புதுச்சேரி மகளிர் அணி வீராங்கனைகளை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us