/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அட்டிய பட்டியா போட்டி புதுச்சேரி அணிகள் சாதனை
/
தேசிய அட்டிய பட்டியா போட்டி புதுச்சேரி அணிகள் சாதனை
தேசிய அட்டிய பட்டியா போட்டி புதுச்சேரி அணிகள் சாதனை
தேசிய அட்டிய பட்டியா போட்டி புதுச்சேரி அணிகள் சாதனை
ADDED : நவ 21, 2024 05:37 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான 35 வது அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி மாணவர், மாணவியர் அணிகள் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஈரோடு தனியார் பள்ளியில் 35வது ஜூனியர் மாணவர், மாணவிகளுக்கான தேசிய அளவிலான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 8ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது.
இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, பீகார், டெல்லி, சண்டிகர், கேரளா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
இதில், புதுச்சேரி மாணவர் அணி இறுதி போட்டியில் கேரளா அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இதுபோல், புதுச்சேரி மாணவியர் அணி இறுதி போட்டியில் கேரளா அணியை வென்றது.
புதுச்சேரி மாணவர், மாணவியர் அணிகள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்ந்துள்ளனர். மாணவர் பிரிவில் சந்துரு தேசிய அளவில் சிறந்த ஆல் ரவுண்டராகவும், மாணவியர் பிரிவில் வரலட்சுமி சிறந்த அபன்ஸ் ஆகவும், ஆதிஷா சிறந்த ஆல் ரவுண்டராகவும் தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற அணியினரை, புதுச்சேரி அட்டிய பட்டியா சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
மாணவர் அணிக்கு மேலாளராக விஜயபாஸ்கர், பயிற்சியாளராக ராஜ்குமார், மாணவியர் அணிக்கு மேலாளராக சுவாதி, துணை மேலாளராக சந்தியா, பயிற்சியாளராக இனியன் ஆகியோர் வழிநடத்தினர்.