sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிய மாநிலம் புதுச்சேரி: சட்டசபையில் ருசிகர விவாதம் சட்டசபையில் ருசீகர விவாதம்

/

எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிய மாநிலம் புதுச்சேரி: சட்டசபையில் ருசிகர விவாதம் சட்டசபையில் ருசீகர விவாதம்

எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிய மாநிலம் புதுச்சேரி: சட்டசபையில் ருசிகர விவாதம் சட்டசபையில் ருசீகர விவாதம்

எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறிய மாநிலம் புதுச்சேரி: சட்டசபையில் ருசிகர விவாதம் சட்டசபையில் ருசீகர விவாதம்


ADDED : மார் 22, 2025 03:26 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., பேசுகையில்; தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பாலாறு, தேனாறு ஓடும் என்றார்கள். ஆனால் எதுவும் ஓடவில்லை.

ஜான்குமார் (பா.ஜ): கடந்த ஆட்சியில் நிழல் முதல்வராக இருந்தேன். முதியோர் பென்ஷன் ஒரு ரூபாய் கூட உயர்த்த முடியவில்லை. இந்த ஆட்சி வந்த உடன் ரூ. 500 பென்ஷன் உயர்த்தப்பட்டது.

அமைச்சர் லட்சுமிநாராயணன்: ஆற்றில் தண்ணீரே ஓடவில்லை. அப்புறம் எப்படி பாலாறு, தேனாறு ஓடும். வார்த்தைக்காக கூறியதை வைத்து கொண்டு பேச வேண்டியது இல்லை. இந்த ஆட்சியில் என்ன நடந்துள்ளது என பாருங்கள்.

துணை சபாநாயகர் ராஜவேலு: கடந்த ஆட்சி சரியில்லை என்பதால் நம்மை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஏன் கடந்த ஆட்சியை பற்றி பேசுகிறீர்கள்.

பி.ஆர்.சிவா (சுயே.,): புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால காங்., ஆட்சி கருப்பு புள்ளியாக அமைந்தது. மாநில வளர்ச்சி பின்நோக்கி சென்றது.

வைத்தியநாதன் (காங்); இதற்கு கவர்னராக இருந்த கிரண்பேடி செய்த வேலைகள் காரணம்.

அசோக்பாபு (பா.ஜ): காங்., கட்சிக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை. எந்த திட்டத்தையும் எந்த கவர்னரும் தடுக்கவில்லை.

வைத்தியநாதன் (காங்.,): என்.ஆர்.காங்., ஆட்சியில் ஏ.கே.சிங் கவர்னராக இருந்தார். அவர் எந்த திட்டத்தையும் தடுக்கவில்லை. ஆட்சிக்கு துணையாக இருந்தார். பா.ஜ.,வின் வேலை கவர்னரை அனுப்பி ஆட்சியை கெடுப்பது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு செல்லும் தீர்மானத்தை நிறைவேற்றுவது தான் கவர்னரின் கடமை. ஆனால், எந்த மாநிலத்திலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பா.ஜ., சுதந்திரமாக செயல்பட விட்டு இருக்கிறதா.

அசோக்பாபு (பா.ஜ.,); நாட்டில் அதிக ஆட்சி கவிழ்ப்பு செய்தது காங்., தான். காங்., கட்சிக்கு மக்கள் செல்வாக்கு பூஜ்ஜியம். மக்கள் செல்வாக்கு பெறுவது எப்படி என பாருங்கள்.

வைத்தியநாதன் (காங்.,); பா.ஜ.,வுக்கு மட்டும் மக்கள் செல்வாக்கு 100 சதவீதம் உள்ளதா. எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறீர்கள். மக்கள் செல்வாக்கை பற்றி நீங்கள் பேசுவதா.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: கடந்த 1947ல் சுதந்திரம் கிடைத்த பிறகு காங்., ஆட்சி அமைத்தது. ஆனால், 1977ல் மொராஜ் தேசாய் பிரதமராக வந்த பிறகு தான் ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரிந்தது. ஏழைகளுக்கான திட்டங்களை கொண்டு வந்தார்.

ஒரே ஒரு ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங்., சமூக நீதிக்காக போராடி ஓ.பி.சி.,க்கு இடஒதுக்கீடு பெற்று கொடுத்தார். 1996ம் ஆண்டு பிரதமராக வந்த வாஜ்பாய், அமைத்த தங்க நாற்கர சாலை வெளிநாட்டினர் பாராட்டினர். தற்போது பிரதமர் மோடி 2047ல் இந்தியாவை வல்லரசாக்குவோம் என சபதம் எடுத்துள்ளார்.

செந்தில்குமார் (தி.மு.க.,): அமைச்சர் பல நல்ல விஷயங்களை கூறினார். ஆனால், நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதுபோல், காங்., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை விட்டு விட்டார்.

அசோக்பாபு (பா.ஜ.,): காங்., எமர்ஜென்சியை கொண்டு வந்தது. 2 முறை தி.மு.க., ஆட்சியை கலைத்ததும் காங்., தான்.

நாஜிம் (தி.மு.க.,): யாராக இருந்தாலும் நிதானித்து பேசுங்கள். யார் எப்போது எங்கு செல்வீர்கள் என தெரியவில்லை.

அசோக்பாபு (பா.ஜ.): நான் ஒரே இடத்தில் இருப்பேன். எங்கும் செல்ல மாட்டேன்.

நாஜிம்: தே.மு.தி.க., வை மறந்துவிடாதீர்கள்.

அமைச்சர் சாய் சரவணன்குமார்: ஆயிரம் பேர் எந்த கட்சியில் இருந்தும் பா.ஜ.,வுக்கு வருவார்கள். ஒரே ஒரு கட்சி தொண்டர் கூட வெளியே செல்ல மாட்டார்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: கட்சி மாறினால் பதவி பறிபோகும் என தெரிந்து கட்சி மாறிய மாநிலமும் புதுச்சேரி. நானும் காங்., கட்சியில் இருந்துள்ளேன்.

இந்த விவாதத்தின்போது, என்.ஆர்.காங்., - பா.ஜ., - தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்களை அமர வைத்து விவாதத்தை முடித்து வைத்தார்.






      Dinamalar
      Follow us