தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி டூ காரைக்கால் பஸ், ரயில் நேரம்

புதுச்சேரி டூ காரைக்கால் பஸ், ரயில் நேரம்

புதுச்சேரி டூ காரைக்கால் பஸ், ரயில் நேரம்


ADDED : செப் 24, 2023 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2023 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தினசரி காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் காலை 5:20, 6:00 , பகல் 12:15, 2:00, 3:15 மற்றும் மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

மறுமார்க்கத்தில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு காலை 4:00, 6:00, 9:15 மணிக்கும், மதியம் 12:30, 2:15 மணிக்கும், மாலை 6:10, இரவு 9:30 மணிக்கும் இயக்கப்படுகிறது. இவை தவிர தமிழக அரசு மற்றும் சில தனியார் பஸ்களும் காரைக்காலுக்கு இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் தமிழக அரசு விரைவு பஸ்கள் புதுச்சேரி பஸ் நிலையம் வந்து செல்கிறது. இந்த பஸ்களிலும் காரைக்கால் செல்லலாம்.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. கடலுார் துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு ரயில் மூலம் செல்லலாம்.

சென்னையில் இருந்து காரைக்காலுக்கு தினசரி செல்லும் ரயில் (எண்:16175) இரவு 12:20 மணிக்கு கடலுார் துறைமுக ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த ரயில் காலை 4:50 மணிக்கு காரைக்கால் அடைகிறது.

மறுமார்க்கத்தில் தினசரி இரவு 9:20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 12:35 மணிக்கு கடலுார் துறைமுக ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us