/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டிராவல் மார்ட் - 2026 சுற்றுலா கண்காட்சி
/
புதுச்சேரி டிராவல் மார்ட் - 2026 சுற்றுலா கண்காட்சி
புதுச்சேரி டிராவல் மார்ட் - 2026 சுற்றுலா கண்காட்சி
புதுச்சேரி டிராவல் மார்ட் - 2026 சுற்றுலா கண்காட்சி
ADDED : பிப் 08, 2026 04:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 'தி டூரிசம் செல்டர்' நிறுவனம் சார்பில், 6ம் ஆண்டு புதுச்சேரி டிராவல் மார்ட் -2026' சுற்றுலா கண்காட்சி துவங்கியது.
நிகழ்ச்சிக்கு 'தி டூரிசம் செல்டர்' நிறுவன தலைமை செயல் அதிகாரி சவுகடா சஹா தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், புதுச்சேரி, மேகாலயா, திரிபுரா, கேரளா, மத்தியப்பிர தேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாத்துறை சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் குறித்து பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். அந்த மாநிலங்களில் உள்ள கைவினை பொருட்களும் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இக்கண்காட்சி இன்று (8ம் தேதி) வரை நடைபெறுகிறது. கண்காட்சியை பார்க்க இவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.

