ADDED : ஏப் 13, 2026 11:33 PM
புதுச்சேரி: டி.நகரில் வேட்பாளராக த.வெ.க.,வின் பொதுச்செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவருக்கு பிரசாரம் செய்ய புதுச்சேரி நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இதில் இந்த முறை நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., போட்டியிடுகிறது. கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவருக்கு அடுத்தபடியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்து சென்னை டி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 9ம் தேதி நடந்தது. புதுச்சேரியில் என்.எம்.கே., வுடன் கூட்டணி அமைத்து த.வெ.க., 30 தொகுதிகளில் போட்டியிட்டது. ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்து போட்டியிடும் டி.நகரில் பிரசாரம் செய்ய மற்றும் தேர்தல் வேலைகளை மேற்கொள்ள புதுச்சேரி த.வெ.க.,வினர் சென்னையில் முகாமிட்டு பிரசாரம் மற்றும் தேர்தல் வேலைகளை பார்த்து வருகின்றனர்.
