/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகம் மறு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
/
புதுச்சேரி பல்கலைக்கழகம் மறு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகம் மறு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகம் மறு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
ADDED : டிச 23, 2024 06:13 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் ஒத்தி வைக்கப்பட்ட இளநிலை கலை, அறிவியல் மற்றும் தொழில் பாடப்பிரிவு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் ஜன., 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என, புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இணைப்பு கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, பல்கலைக்கழக உதவி பதிவாளர் ராஜலட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
அனைத்து இளநிலை கலை, அறிவியல் தொழில் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான 3வது மற்றும் 6வது செமஸ்டர் தேர்வுகள் டிச., 3ம் தேதி முதல் டிச., 18ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுகள் தொடர் கனமழை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை வரும்ஜன., 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட செமஸ்ர் தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:
டிச., 3ம் தேதி நடைபெற வேண்டிய தேர்வு ஜன., 6ம் தேதியும், டிச., 4ம் தேதி தேர்வு ஜன., 7ம் தேதியும், டிச., 5ம் தேதி தேர்வு ஜன., 8ம் தேதியும், டிச.,12ம் தேதி தேர்வு ஜன.,9ம் தேதியும் நடக்கிறது,
டிச.,13ம் தேதி தேர்வு ஜன., 10ம் தேதியும், டிச., 16ம் தேதி தேர்வு ஜன., 11ம் தேதியும், டிச.,17ம் தேதி தேர்வு ஜன.,18ம் தேதியும், டிச.,18ம் தேதி தேர்வு ஜன., 20ம் தேதியும் நடக்கிறது. திருத்தப்பட்ட தேர்வு தேதி குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

